News November 18, 2024

பாஜக ஆதரவை திரும்பப் பெற்ற என்.பி.பி

image

மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றுள்ளது. மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு, அக்கட்சி ஆதரவளித்து வந்த நிலையில் அக்கட்சி திடீரென விலகல் முடிவை அறிவித்துள்ளது. மாநிலத்தில் நெருக்கடியை தவிர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தலைவர் சங்மா, பாஜக தலைவர் நட்டாவுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்

image

கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், 2005-ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (NREGA) கொண்டு வரப்பட்டது. 2009-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஸ்கர் யோஜனா’ (PBGRY) என்ற பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக ₹1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News December 12, 2025

தமிழ் நடிகை மரணம்.. தொடரும் சோகம்

image

இன்று பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை <<18544425>>ராஜேஸ்வரி<<>> உயிரிழந்தாா். இந்நிலையில், சமீப காலத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் உயிரிழந்ததால், திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. தமிழ் சினிமா இவர்களை என்று நினைவில் வைத்திருக்கும். அப்படி யாரெல்லாம் மறைந்தனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 12, 2025

நம்மிடம் நாமே பேசுவதால் கிடைக்கும் நன்மைகள்

image

நம்மிடம் நாமே பேசுவது (Self-talk) என்பது ஒரு சாதாரண உளவியல் நிகழ்வு. இதனால் மனநல ஆரோக்கியம் மேம்படும். நம்மிடம் நாமே பேசுவது, குழப்பங்களைத் தீர்ப்பதற்கும், இலக்குகளை அடைவதற்கும் உதவும் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறையாகும். இதனால் ஏற்படும் பல்வேறு நன்மைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!