News March 29, 2024
₹11 கோடி வரி பாக்கியை செலுத்த நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பழைய PAN எண்ணை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள வருமானவரித் துறை, நிலுவையில் உள்ள ₹11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி ₹1,823 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 24, 2026
NDA ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி: செல்வப்பெருந்தகை

முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக, அதிமுக கூட்டணி உள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நாட்டிலேயே பாஜகவை கடுமையாக எதிர்க்கின்ற மாநிலமாக தமிழகம் இருப்பதை, PM மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு தமிழகம் மீது காட்டும் பாரபட்ச போக்கே தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிப்பதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
இனி பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிம்மதி

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஊதியத்தை, பிள்ளைகளின் கல்விக்காகவே அதிகம் செலவு செய்கின்றனர். ஆண்டுக் கட்டணம், புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட பல வகைகளில் பெற்றோர்களிடம் ₹30,000 முதல் ஒரு லட்சத்திற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையிலும் ஈடுபடுகின்றன. இதனால், பெற்றோர் கடன் வாங்கும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதை கட்டுப்படுத்த <<18945619>>TN அரசு நடவடிக்கை<<>> எடுத்துள்ளது.
News January 24, 2026
இரவல் வார்த்தைகளை பேசும் மாணிக்கம் தாகூர்: இன்பதுரை

பண அதிகாரம் கொண்ட NDA கூட்டணியை வீழ்த்த வேண்டும் எனக் கூறிய மாணிக்கம் தாகூருக்கு, அதிமுக எம்பி இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். சுய சிந்தனை கொண்ட மாணிக்கம் தாகூர், கடந்த வாரம் கட்சிக்குள் அடித்த புயலால், யாரோ எழுதி கொடுத்த இரவல் வார்த்தைகளை நிர்பந்தத்தால் பேசியிருக்கிறார்; வெள்ளையர்களிடம் போராடி பெற்று தந்த சுதந்திரம், காங்.,க்கு கிடைக்காமல் போனதுதான் நகை முரண் எனவும் விமர்சித்துள்ளார்.


