News January 13, 2025
பொங்கல் நாளில் தேர்வு இல்லை

கேந்திர வித்யாலயா பள்ளிகளின் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஜன.13-16 வரை சில தேர்வுகள் நடக்கவிருந்தது. இதனையடுத்து, தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் நாளில் தேர்வு நடத்தக்கூடாது என்று சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதை ஏற்று தேர்வு தேதிகள் மாற்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாணவர்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 8, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*உண்மையை சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி 2 மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால், நாம் பெறும் இன்பம் 2 மடங்காகும். *உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதில் பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
News December 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 543 ▶குறள்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். ▶பொருள்: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
News December 8, 2025
ஹஜ் யாத்ரீகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம்

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், ‘நுஸுக்’ அட்டைகளில் புதிய விதிகளை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அட்டை வடிவிலும் வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும் யாத்ரீகர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


