News August 20, 2024

இந்திய மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த நியூசிலாந்து!

image

மேற்படிப்புக்காக நியூசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்களுக்கு, அந்நாட்டு அரசு அதிர்ச்சித்தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, உயர்கல்வி விசாவுக்கான கட்டணத்தை நியூசிலாந்து உயர்த்தியுள்ளது. இதுவரை ₹19,000ஆக இருந்த கட்டணத்தை ₹38,190ஆக (இருமடங்கு) உயர்த்தியுள்ளது. இது அக்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நியூசி.,சென்று பயிலும் மாணவர்களில், இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

Similar News

News January 25, 2026

முந்தைய நாள் வரை KAS அழைத்தார்: TTV

image

தான் தவெகவுடன் வருவேன் என ஒருநாளும் சொல்லவில்லை என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன் அவரே முடிவெடுத்து தவெகவுக்கு போய்விட்டார் என்றும், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதற்கு முந்தைய நாள் வரை, தன்னை தவெகவில் இணையும்படி அழைத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் NDA-ல் இணைந்தபின் அழைத்தபோது, அவர் என்னிடம் பேசவே இல்லை எனறு என்றும் கூறியுள்ளார்.

News January 25, 2026

தமிழகத்தை சேர்ந்த தலைவருக்கு பாரத ரத்னா?

image

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படாத நிலையில், இந்தாண்டு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும், அதேபோன்று தென் TN-ஐ சேர்ந்த தலைவர் ஒருவருக்கும் வழங்கப்படலாம் எனவும் PM அலுவலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

News January 25, 2026

கனடா மீது 100% வரி பாயும்: டிரம்ப்

image

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் ஒருபக்கம் வெனிசுலா, கிரீன்லாந்து நாடுகளை கைப்பற்றி வரும் வேளையில், சீனாவுடன் அமெரிக்காவின் அண்டை நாடான கனடா ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. எனினும் இந்த 100% வரி அமலானால் இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

error: Content is protected !!