News August 5, 2024

நாதக வளர்ச்சியை தடுக்க புதிய திட்டங்கள் தொடக்கம்: சீமான்

image

நாதகவின் வளர்ச்சியைத் தடுக்க, இளைஞர்களுக்கான ‘தவப்புதல்வன்’ உள்ளிட்ட புதிய திட்டங்களை திமுக அரசு தொடங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். தற்போதைய இளந்தலைமுறையினர் திராவிட கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், தமிழகத்தை சுத்தம் செய்ய நாதக ஆட்சியை கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை இளையோர் கூட்டம் உணர்ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

12 பேரை காதலித்த தமிழ் நடிகை

image

ஒருவரை காதலித்து கரம் பிடிப்பதே பெரிய சோதனையாக இருக்கும் நிலையில், இங்கு ஒருவர் 12 பேரை காதலித்து டேட்டிங் செய்திருக்கிறார். ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘பாபா’ படங்களில் நடித்து தமிழில் ஒரு கலக்கு கலக்கிய மனிஷா கொய்ராலா பீக்கில் இருந்த காலத்தில் 12 பேரை காதலித்துள்ளாராம். கடைசியாக, தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்த அவர், அடுத்த 2 வருடங்களிலேயே அவரை விவகாரத்து செய்துவிட்டார்.

News January 25, 2026

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

image

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

News January 25, 2026

இன்று தேசிய சுற்றுலா தினம்!

image

ஊர் சுற்றிப் பார்க்க யாருக்கு பிடிக்காது! இந்தியாவின் அழகை உலகிற்கு சொல்லும் விழா என இன்றைய நாளை இன்றை குறிப்பிடலாம். ‘அதிதி தேவோ பவ’ என்ற பண்பாட்டை நினைவூட்டும் விதமாகவும், சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 25-ல், ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் எது?

error: Content is protected !!