News November 22, 2024
WHATSAPPஇல் புதிய வசதி.. இனி குரல் பதிவை படிக்கலாம்

WHATSAPP நிறுவனம் வாய்ஸ் மெசேஜை எழுத்து வடிவில் படிக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால், அதை எழுத்து வடிவில் நாம் வாசிக்க முடியும். இந்த வசதியால் வாய்ஸ் மெசேஜில் இரைச்சல் அல்லது தெளிவின்மை இருந்தால், எளிதாக படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை பெற செட்டிங்ஸ் சென்று CHATS பகுதியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
Similar News
News November 11, 2025
சற்றுமுன்: தங்க மகன் காலமானார்

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ‘தங்க மகன்’ விஷ்ணு ரகுநாதன்(27) விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஷ்ணுவும், அவருடன் சென்ற மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. 2024-ல் ஹாங்காங் ஆசியக் கோப்பை தொடரில் படகு போட்டியில்(kayaking) தங்கம் வென்று விஷ்ணு அசத்தியது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
‘நாங்கள் இந்தியர்கள்’ கைதான முஜாமிலின் சகோதரர்

ஃபரீதாபாத்தில் வெடிபொருள்கள் வைத்திருந்ததாக கைதான டாக்டர் முஜாமிலின் சகோதரர் ஆசாத் ஷகில், ‘நாங்கள் மனதார இந்தியர்கள், இந்தியாவுக்காக கல்வீச்சுக்கு ஆளானோம்’ என்று கூறியுள்ளார். எல்லோரும் அவரை ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்சம்பவத்தால், தனது சகோதரியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
ஹை அலர்ட்டில் பாகிஸ்தான்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா பதிலடி கொடுக்கலாம் என பாக்., உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, பாக்., ராணுவம் தனது அனைத்து விமானப்படை தளங்கள், விமான நிலையங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், ராணுவம், கடற்படை, விமானப்படை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


