News January 14, 2025
NET தேர்வு ஒத்திவைப்பு: CM ஸ்டாலின் வரவேற்பு

பொங்கல் திருநாளில் நடைபெற இருந்த UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்பட்டது சரியான முடிவு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தமிழர் பண்பாட்டு திருநாட்களில் தேர்வை அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்கு பின்பு ஒத்திவைப்பதும் மத்திய அரசின் வாடிக்கையாகிவட்டதாகவும் சாடியுள்ளார். இனியாவது நாட்டின் பன்முகத்தன்மை, அனைத்து தரப்பு மக்களின் உணர்வையும் மதித்து முடிவெடுப்பர் என்று நம்புவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ✤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.
News November 10, 2025
தமிழகத்தில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்ட மாங்காடு நகராட்சியில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்போது, 34 வகையான கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.
News November 10, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

கரூரில் அதிமுகவிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதுப்பாளையம், ஒத்தையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக, தவெக, தேமுதிகவினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். நேற்று முன்தினம் <<18233598>>திமுக மாவட்ட நிர்வாகிகள்<<>> சிலர் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக போட்டி போட்டு மாற்றுக் கட்சியினரை இழுத்து வருகின்றன.


