News May 16, 2024

தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

image

ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடிய நீரஜ் சோப்ரா, இறுதியில் 82.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.
இப்போட்டியில் டி.பி. மானு வெள்ளி பதக்கமும், உத்தம் பட்டீல் வெண்கல பதக்கமும் வென்றனர்.

Similar News

News November 14, 2025

தேஜஸ்வி யாதவ் வெற்றி

image

பிஹார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் சதீஷ்குமாரை விட பின்தங்கி இருந்தார். எனினும், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். அதேநேரம் அவரது MGB கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

News November 14, 2025

மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா

image

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது கட்டாயம் என்பதை பிஹார் மக்கள் நிரூபித்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மோடி அரசின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

News November 14, 2025

SIR பணிகளில் குளறுபடி செய்யும் திமுக: EPS

image

தமிழக அரசின் தலையீட்டால் SIR பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ECI விழிப்போடு இருந்து அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். போலி வாக்காளர்களை நீக்க SIR முறையாக நடக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே அதில் குளறுபடி செய்ய திமுக முயல்வதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!