News August 19, 2025
CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 6, 2025
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் புறத்தொடர்பு பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 6, 2025
உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.
News December 6, 2025
இன்று ரேஸில் வெல்வாரா அஜித்குமார்?

மலேசியாவில் இன்று நடைபெறும் Michelin 12H கார் ரேஸிங்கில் அஜித்குமார் களமிறங்கவுள்ளார். இந்த ஆண்டில் ரேஸிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தி வரும் அஜித், சில போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகிறது.


