News January 11, 2025
நவபஞ்சம ராஜயோகம்: துள்ளி குதிக்க போகும் 4 ராசிகள் ❤️

குருவுக்கு 9ஆம் வீட்டில் சூரிய பகவானும், சூரியனுக்கு 5ஆம் வீட்டில் குரு பகவானும் சஞ்சரிக்க போவதால் 4 ராசிகளுக்கு நவபஞ்சம ராஜயோகம் அடிக்கவுள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு வருமானம் பல மடங்கு உயரப் போகிறது. திறமையை வெளிப்படுத்தி முன்னேறும் காலம் இது. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
Similar News
News November 10, 2025
ஆதாரில் வரும் அதிரடி மாற்றம்.. கவனியுங்க மக்களே!

‘ஆதார் விஷன் 2032’ என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆதார் கார்டு சேவையிலும் AI தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 அதிநவீன தொழில்நுட்பங்கள் வரவுள்ளன ✦AI: மோசடிகளை குறைக்கவும் முடியும் ✦குவாண்டம் கம்ப்யூட்டிங்: எதிர்காலத்தில் வரக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆதார் அமைப்பைப் பாதுகாப்பது ✦பிளாக்செயின்: தரவுகள் சரிபார்ப்பை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் என கூறப்படுகிறது.
News November 10, 2025
வெள்ளி விலை இன்று ₹2,000 உயர்ந்தது

வெள்ளி மீண்டும் விலை உயர்வைக் கண்டுள்ளது. இன்று (நவ.10) கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹167-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,67,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும், அதில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பின்னர் விலை சரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இன்றைய விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
News November 10, 2025
அண்ணாமலையின் செயலால் PM மோடி மகிழ்ச்சி

கோவாவில் நடைபெற்ற ’அயர்ன்மேன் 70.3’ நிகழ்வில் பங்கேற்று நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தார் அண்ணாமலை. இதனை பாராட்டி PM மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.


