News April 16, 2024

அதிரடியாக அரை சதம் கடந்தார் நரைன்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் அரை சதம் கடந்துள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தால் KKR அணி 12 ஓவர்கள் முடிவில் 125/2 ரன்கள் எடுத்துள்ளது. பிலிப் 10, ரகுவன்ஷி 30 ரன்னில் ஆட்டமிழந்தனர். நரைன் 70*, ஷ்ரேயஸ் ஐயர் 4* ரன்கள் அடித்துள்ளனர். குல்தீப் சென், ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Similar News

News November 14, 2025

தன வரவு அதிகரிக்கும் மகாலட்சுமி வழிபாடு!

image

வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் இடவும். அதன் நடுவில் குங்குமப் பொட்டு வைக்கவும். தாம்பாள தட்டின் மேல் இந்த வெற்றிலையை,
மகாலட்சுமியாக பாவித்து மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது, பின்வரும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. இந்த ஆன்மிக பதிவை அனைவரும் அறிய ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

காலை சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..

image

மனிதர்களுக்கு காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒருநாள் முழுவதும் நாம் செயல்படுவதற்கு தேவையான ஆற்றலின் மூலமாக காலை உணவு உள்ளது. அதனால் தான் அதன் பெயர் Break Fast. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவை எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது, காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News November 14, 2025

EPS-க்கு மன்னிப்பு கடிதம் எழுதவில்லை: வைத்திலிங்கம்

image

OPS ஆதரவாளர் <<18275451>>வைத்திலிங்கம்<<>>, மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என அவர் மறுத்துள்ளார். EPS-யிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை. இதுபோன்ற பொய் செய்திகள் எனக்கு வருத்தமளிக்கிறது. அதிமுகவை மீட்டெடுத்து ஆட்சியில் அமர வைப்பதுதான் எனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!