News October 13, 2025
பிஹாரில் பரவும் மர்ம நோய்.. அடுத்தடுத்து உயிரிழப்பு

பிஹாரின் டூத் பனியா கிராமத்தில் பரவும் மர்ம நோயால், இளைஞர்கள் குறைந்த வயதிலேயே அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமவாசிகள் 40 வயதை அடைவதே மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி வருவது India Today நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மத்திய மருத்துவ குழு இன்று அக்கிராமத்திற்கு செல்ல உள்ளது. அதேபோல், உள்ளூர் மருத்துவ குழு அங்குள்ள நீரை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளது.
Similar News
News December 10, 2025
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பெண் ரவுடிக்கு சிறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ₹750 மதிப்பில் 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பு வரும் 3-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.
News December 10, 2025
ஷூட்டிங்கே போகல.. அதுக்குள்ள ₹80 கோடி லாபம்!

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி வரை லாபம் கிடைத்து விட்டதாம். படத்தின் வெளிநாட்டு உரிமம், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை விற்கப்பட்டு, இந்த ஜாக்பாட் சூர்யாவுக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யா – ஜித்து மாதவன் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதையும் இது காட்டுகிறது.


