News August 8, 2025
தனுஷின் சகோதரிகளை ஃபாலோவ் செய்யும் மிருணாள்

<<17306052>>தனுஷ் – மிருணாள்<<>> தாகூர் டேட்டிங் செய்வதாக ஒரு வாரமாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இதுவரையிலும், இது குறித்து இருவரும் எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷுன் சகோதரிகளான கார்த்திகா மற்றும் விமலா கீதாவை மிருணாள் இன்ஸ்டாவில் ஃபாலோவ் செய்வதும், அவர்களும் இவரை ஃபாலோவ் செய்வதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இருப்பினும், மேற்கூறிய ஜோடி ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.
Similar News
News August 8, 2025
என் நாட்டை பற்றி முடிவு செய்ய டிரம்ப் யார்? சீமான் கேள்வி

டிரம்ப்பின் வரிவிதிப்பு பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டை கொண்டு செல்லும் என சீமான் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க ஒரே நாட்டைச் சார்ந்திருப்பது போராபத்து எனவும், என் நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க டிரம்ப் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்னையில் துப்புறவு தொழிலாளர்கள் பல நாள்கள் போராடி வருவதுதான் தமிழக ஆட்சியின் அவ லட்சணம் எனவும் சாடியுள்ளார்.
News August 8, 2025
மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி தர ஆணை

9 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் சான்றிதழ் படிப்புகள், போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் என அனைத்து செயல்பாடுகளுக்கும் இ-மெயில் தேவைப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி, அந்த முகவரியை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 8, 2025
ஆடி வெள்ளியுடன் வரும் பெளர்ணமி

ஆடி மாதத்தின் 4ம் வெள்ளியான இன்று பெளர்ணமி திதியும் சேர்ந்து வருகிறது. ஆகையால் இன்றைய தினத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி பெருகும் என்பது ஐதீகம். சிவனுக்கு பாலபிஷேகம் செய்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது.