News February 23, 2025
அம்மாவுக்கு கள்ளக்காதல்.. மகன்கள் செய்த கொடூரம்

தாயுடன் தகாத உறவிலிருந்த நபரை மகன்கள் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் கணவரை இழந்த பணக்கார பெண் ஒருவர், 45 வயது கொத்தனாருடன் தகாத உறவிலிருந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் மகன்கள், கொத்தனாரான ரத்தன் ஜியை அழைத்துக் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் உறவைத் தொடர்ந்ததால் மகன்கள் கொத்தனாரை கொடூரமாக அடித்துக் கொன்றனர். சிறிய வயதில் இருவரும் சிறையில் உள்ளனர்.
Similar News
News July 10, 2025
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News July 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 391 ▶குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ▶ பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.
News July 10, 2025
வங்கதேசத்துக்கு பதில் இலங்கை? பிசிசிஐ முடிவு

இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சென்று ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது. தற்போது இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை சென்று 3 ODI, 3 T20கள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் உள்ளன. இருகிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், ஆகஸ்ட்டில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.