News August 20, 2024

மோர்கல் தவறு செய்ய வாய்ப்பில்லை: அல்பி மோர்கல்

image

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இணைய உள்ள நிலையில், பும்ரா போன்ற சிறப்பான பவுலர்களுடன் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மோர்கலின் சகோதரர் அல்பி மோர்கல் கூறியுள்ளார். இதனால், தனது சகோதரர் தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

Similar News

News January 14, 2026

இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

image

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க.. தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் *மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் *கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்

News January 14, 2026

‘ஆசிரியர் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பு’

image

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே பொறுப்பு என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும் வாழ்க்கையும் எப்படி புரியும் என அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கண்ணனின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

News January 14, 2026

2-வது ODI: வெற்றியை நோக்கி நியூசிலாந்து

image

ராஜ்கோட்டில் நடக்கும் 2-வது ODI-ல், நியூசிலாந்து வெற்றி முகத்தில் உள்ளது. 285 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய NZ, முதல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு டேரில் மிட்செல், வில் யங் அபாரமாக ஆடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன. NZ-ன் வெற்றியை தடுக்க இந்தியா என்ன செய்யணும்?

error: Content is protected !!