News October 11, 2025
பட்டாசு வெடிக்க திங்கள் முதல் பள்ளிகளில் விழிப்புணர்வு

தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். நாளை விடுமுறை என்பதால், திங்கள் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது.
Similar News
News December 9, 2025
சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தது ஜிகே மணி தான்!

பாமகவின் உள்கட்சி பிரச்னைகளுக்கு பாஜகவே காரணம் என திமுக கூறி வந்த நிலையில், குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தான் தலைவரான அடுத்த நாளில் இருந்தே ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது அவர் தான் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 9, 2025
இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா?

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ICC-யிடம் போட்ட டீலில் இருந்து Hotstar பின்வாங்க முடிவு செய்துள்ளது. 2024-ல் $3 பில்லியனுக்கு ஹாட்ஸ்டார் போட்ட இந்த டீல் 2027 தான் முடிவடைகிறது. ஆனால் கடுமையான நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னதாகவே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அந்நிறுவனம் நினைக்கிறதாம். 2026 WC நெருங்குவதால், சோனி, அமேசான், நெட்பிளிக்ஸிடம் ICC பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
News December 9, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

2 நாள்களாக கனமழை இல்லாத நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதோடு, தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.


