News August 7, 2024
அரசின் தலைவராக முகமது யூனுஸ் தேர்வு

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததன் எதிரொலியாக அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர் பிரதிநிதிகளை அழைத்து காபந்து அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் முன்மொழிவின்படி, இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தேர்ந்தேடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 25, 2026
புதுச்சேரிக்கு புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். புதுச்சேரிக்கு புதிதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய தம்பதிகள் திவ்யா மற்றும் ராகவ் ஆகிய இருவரும் தற்போது புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் புதுச்சேரி ஐ.ஜி வேறு மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 25, 2026
கிரிக்கெட்டில் முதலடியை எடுத்து வைத்த ஜப்பான்

ICC போட்டிகளில் முதல் வெற்றியை ஜப்பானின் இளம் தலைமுறை பெற்றுள்ளது. U19 WC தான்சானியாவை எதிர்கொண்ட ஜப்பான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய தான்சானியா 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடந்து களமிறங்கிய ஜப்பான் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 28.2 ஓவர்களில் 136/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
News January 25, 2026
நடக்க முடியாமல் தடுமாறும் ஹிருத்திக் ரோஷன்!

கட்டுமஸ்தான உடல், ஸ்டைலிஷான நடனம் என ரசிகர்களை கவரும் ஹிருத்திக் ரோஷனின், சமீபத்திய போட்டோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றுக்கு கைத்தடியுடன் ஹிருத்திக் ரோஷன் வந்ததே இதற்கு காரணம். அவரது உடல்நலம் பாதிப்புக்கான முழுமையான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அடுத்ததாக ‘கிரிஷ் 4’ படத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக அறிவித்த அவர், அதற்கான பணிகளில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார்.


