News May 2, 2024
தேர்தல் பிரசாரத்தில் உளறி வருகிறார் மோடி

பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீட்டின் வரலாறு தெரியவில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா எனக் கேள்வி எழுப்பிய பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், தேர்தல் பிரசாரத்தில் மோடி உளறி வருவதாகக் கூறினார். அரசியலமைப்புப்படியே எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகக் கூறிய அவர், அந்தச் சட்டத்தை அமல்படுத்தியது காங்கிரஸ்தான் என்றார்.
Similar News
News December 9, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News December 9, 2025
இந்தியாவில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்

இந்தியா தனது லட்சியத்தை அடைவதற்கு மைக்ரோசாப்ட் துணை நிற்கும் என்று சத்யா நாதெல்லா உறுதியளித்துள்ளார். இதுபற்றி PM மோடியுடன் உரையாடியதாகவும், இந்தியாவின் AI வளர்ச்சிக்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தொகையானது, ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவின் AI எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு, திறனை உருவாக்கிட உதவும் எனவும் கூறியுள்ளார்.
News December 9, 2025
கில்லர் லுக்கில் மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் அவர், கருப்பு நிற உடை, மின்னும் காதணிகள், பிரகாசமான முகம், வசீகரமான பார்வை என மொத்தமாக ரசிகர்களை ஈர்க்கிறார். மிருணாளின் கில்லர் லுக் ஸ்டைலிஷ் போட்டோக்கள், உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக் போடுங்க.


