News March 29, 2024

ஏப்ரலில் தமிழ்நாட்டிற்கு வருகிறார் மோடி?

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, ஏப். 2வது வாரத்தில் பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.4, 5ல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Similar News

News January 20, 2026

ஒரு Wedding Card-ன் விலை ₹25 லட்சம்.. தந்தையின் பாசம்!

image

ஜெய்ப்பூர் தொழிலதிபர் மகள் திருமணத்திற்காக ₹25 லட்சத்தில் வெள்ளியில் இழைக்கப்பட்ட Box வடிவில் Wedding card-ஐ அடித்துள்ளார். 8×6.5 அங்குலம் கொண்ட கார்டில் 65 கடவுள் உருவங்கள் உள்ளன. கடவுள்களும் திருமணத்திற்கு வரவேண்டும் என்பதால், இப்படி அடித்துள்ளதாக கூறுகிறார். இந்த கார்டுகளை தனது மருமகள்களுக்கு மட்டும் வழங்கியுள்ளார். பாசத்திற்கு ஈடு இணையில்லை என்பார்களே, அது இதுதான் போல!

News January 20, 2026

பனையூரில் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

image

பரபரப்பான 2026 தேர்தல் களத்துக்கு மத்தியில், தவெகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனையில் ஈடுபடுகிறது. இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உள்பட பலரும் வருவதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது. 12 பேர் கொண்ட இக்குழு பல்துறை நிபுணர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News January 20, 2026

₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!