News October 12, 2025
வீட்டில் இருந்து நடந்தே வந்த அமைச்சர் மா.சு.,

போதைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சு., சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசுகையில், யாரும் 24 மணி நேரமும் வேலை செய்வதில்லை. எனவே, வேலை நேரம் போக மற்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக, காலையில் 2 மணி நேரம் ஒதுக்கி வாக்கிங் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கக்கூட வீட்டில் இருந்து தான் நடந்தே வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 11, 2025
சற்றுமுன்: திமுகவில் இருந்து அதிரடி நீக்கமா?

அறிவாலயத்தில் CM மு.க.ஸ்டாலினை பார்க்க முடியவில்லை என்றும், தலித் என்பதால் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய முன்னாள் MLA ஆடலரசன், தனது திமுக உறுப்பினர் அட்டையை தூக்கி எறிந்தார். இது ஊடகங்களில் வெளியான நிலையில், அவரை அழைத்து ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் அடங்கிய பிறகு, ஆடலரசனை கட்சியில் இருந்து நீக்க திமுக தலைமை முடிவெடுத்து இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
News December 11, 2025
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி முர்மு வரும் 17-ம் தேதி வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். அவருடன் கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வருகின்றனர். ஸ்ரீநாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தை திறந்து வைத்து மரங்களை நடுகிறார்.
News December 11, 2025
விஜய் உடன் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சித்து பேசாத நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026 தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்று புதுச்சேரி <<18524978>>CM<<>> ரங்கசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நன்றி வணக்கம்’ என கூறிச் சென்றார். இது தவெக உடனான கூட்டணிக்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?


