News November 14, 2025

MGB கூட்டணி தோல்விக்கு 3 காரணங்கள்

image

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் MGB கூட்டணியின் தோல்விக்கு இந்த 3 காரணங்களை சொல்லலாம்: 1) NDA-வில் அதிக கட்சிகள் உள்ளன. MGB-யில் சில கட்சிகள் மட்டுமே. 2) தேர்தலுக்கு முன்பே பெண்களுக்கு <<18261283>>₹10,000 கொடுத்தது<<>>, அவர்களின் வாக்கை மொத்தமாக NDA பக்கம் திருப்பிவிட்டது. 3) MGB கூட்டணி யாதவர்கள், முஸ்லீம் வாக்காளர்களை நம்பி இருக்க, NDA அனைத்து சமூக வாக்காளர்கள், EBC வாக்குகளில் கவனம் செலுத்தியது.

Similar News

News November 14, 2025

‘இன்னும் கொஞ்சம் என’ ரீல்ஸ் பார்ப்பவரா நீங்க?

image

‘இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்’ என்ற யோசனையில் ரீல்ஸ் பாக்குறீங்களா? அது மிகவும் ஆபத்தானது என சீனாவின் தியான்ஜின் நார்மல் யுனிவர்சிட்டி எச்சரிக்கிறது. மது அருந்துவதை விட ரீல்ஸ் பார்ப்பது 5 மடங்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அதிக நேர ரீல்ஸ் பார்ப்பது மூளையின் செயல்திறனையும் நேரடியாக பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!

News November 14, 2025

வாக்குகளை பிரித்தாரா ஒவைஸி?

image

பிஹார் தேர்தலில் ஒவைஸியின் AIMIM கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியிலும் சேராமல், ஆளும் கூட்டணியுடனும் இணையாமல் போட்டியிடுவது இவரின் வழக்கமாக உள்ளது. முஸ்லிம்கள் மெஜாரிட்டி உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இவர், முஸ்லிம் வாக்குகளை பிரித்துவிட்டதும் பல தொகுதிகளில் MGB கூட்டணி தோல்விக்கு காரணம் எனப்படுகிறது.

News November 14, 2025

மாஸ்க்கை அகற்ற முடியாது.. யார் இந்த புஷ்பம் ப்ரியா?

image

நிதிஷ்குமாருக்கு நெருக்கமான அரசியல் பிரபலத்தின் பேத்தியான புஷ்பம் ப்ரியா செளத்ரியின் புளூரல்ஸ் கட்சி, 243 தொகுதிகளிலும் போட்டியிட்டது. எப்போதும் கருப்பு உடை, முகக்கவசம் அணிந்திருக்கும் புஷ்பம், தேர்தலில் வென்ற பிறகே மாஸ்கை அகற்றுவேன் என சவால் விட்டிருந்தார். ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சி முன்னிலை பெறவில்லை. புஷ்பம் போட்டியிட்ட டர்பங்கா தொகுதியில், இதுவரை 750 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

error: Content is protected !!