News August 19, 2024
MBBS, BDS: ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு

MBBS, BDS படிப்புகளில் அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வை 1.53 லட்சம் பேர் எழுதினர். இதில் 89,198 பேர் தேர்வான நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேர 42,951 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 9,050 MBBS, 2,200 BDS இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
சாய் பாபா பொன்மொழிகள்

*பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. *பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை. *ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள். *நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். *தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்.
News January 22, 2026
OpenAI-க்கு ஆபத்து: ஜார்ஜ் நோபுள்

OpenAI விரைவில் சரிந்துவிடும் என்று பிரபல முதலீட்டாளரான ஜார்ஜ் நோபுள் கணித்துள்ளார். கூகுள் ஜெமினி பயனர்கள் வளர்ந்து வரும் நிலையில், ChatGPT போக்குவரத்து தொடர்ந்து 2 மாதங்களாகக் குறைந்துள்ளது. OpenAI, ஒரே காலாண்டில் $12 பில்லியனை இழந்துள்ளது. திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்போது OpenAI பிழைப்பது கடினம் என்று எச்சரித்துள்ளார்.
News January 22, 2026
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப்

உலக பொருளாதார மன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் தனது முயற்சி குறித்து பேசினார். கிரீன்லாந்து ஒரு பனிக்கட்டி துண்டு என்று குறிப்பிட்ட அவர், அதை கைப்பற்ற தான் பலத்தை பயன்படுத்தவில்லை என்று மறைமுகமாக அச்சுறுத்தினார். மேலும், கிரீன்லாந்தை பாதுகாக்கும் திறன் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டிற்கும் இல்லை என்று கூறினார்.


