News August 6, 2024
மனு மேலும் பல பதக்கங்களை வெல்வார்: பி.டி.உஷா

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு பி.டி.உஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். மனு மற்றும் அவரது பயிற்சியாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை அவர் ஏந்துவதற்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை மனு வெல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
ஆரணி: ஏரியில் சடலமாக மிதந்த மாணவன்!

ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் நரேஷ். 12 ம் வகுப்பு பயிலும் நரேஷ் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று தூக்கு சட்டியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் ஏரியில் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 25, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது, மகிழ்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நகைக்கடன் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாம் . கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 25, 2026
2026 தேர்தலில் வெல்லப்போவது யார்?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 2024-ல் பதிவான வாக்குகளை கொண்டு வெற்றி கணக்குகள் ஆராயப்பட்டு வருகின்றன. அந்த வகையில், DMK-26.93%, INC-10.67%, CPM-2.52%, CPI-2.15%, VCK-2.25%, MDMK-2.28%, IUML-1.17% என 46.97% பெற்றது. ADMK-20.46%, DMDK-2.59%, NDA-வில் BJP-11.24%, PMK-4.33%, AMMK-0.90%, TMC-0.94 என மொத்தம் 18.28% & NTK-8.22% பெற்றது. இத்தேர்தலில் TVK-வும் உள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது.


