News February 27, 2025
பக்தியின் மகாகும்பமேளா: அமித்ஷா புகழாரம்

ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுவதாக அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். ஈஷா மகாசிவராத்திரி விழாவில் பேசிய அவர், சத்குரு ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டுள்ள ஞானி என்றார். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருவதாகவும், இந்த விழாவில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
Similar News
News February 27, 2025
இந்தி முகமூடியில் ஒளிந்திருக்கும் சமஸ்கிருதம்: CM

முகமூடி தான் இந்தி, உண்மையில் ஒளிந்திருப்பது சமஸ்கிருதமே என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் மொழியே திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய். சமஸ்கிருதமும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் இந்தி உருவானது. மும்மொழி கொள்கையை ஏற்றால் சமஸ்கிருதமயமாக்கும் திட்டம் நிறைவேறிவிடும் என விளாசியுள்ள அவர், அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது என்றும் சூளுரைத்துள்ளார்.
News February 27, 2025
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் சுற்றுப்பகுதிகளிலும் இன்று (பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
News February 27, 2025
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

பிரபல பாடகர் K.J.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் ஆவார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.