News February 24, 2025
9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா: சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பட்டீஸ்வரசாமி, மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பாக விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News July 9, 2025
நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நிலை கவலைக்கிடம்

நடிகர் ஃபிஷ் வெங்கட்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார். இதுவரை சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு அவர் மாற்றப்பட்டு இருப்பதாகவும், நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உடல்பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News July 9, 2025
முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் சரிவு

முட்டை விலை இன்று ஒரே நாளில் 20 காசுகள் வீழ்ச்சியடைந்திருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1 முட்டையின் விலை நேற்று ₹5.75ஆக இருந்தது. இந்நிலையில் இன்று அதன் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ₹5.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ₹6-க்கு விற்கப்பட்டு வருகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே பதிவிடுங்க.
News July 9, 2025
பட்டாசு ஆலைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக் கூடாது என திட்டவட்டமாக ஆணையம் தெரிவித்துள்ளது.