News November 11, 2024
‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’ ஃபர்ஸ்ட் லுக்

‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனந்தராஜ், பிக்பாஸ் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, அண்ணா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.எஸ்.முகுந்தன் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். வடசென்னையை சேர்ந்த ஒரு தாதா வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்படுகிறது.
Similar News
News November 19, 2025
வைகுண்ட ஏகாதசிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட்களை ஆன்லைனில் மட்டுமே வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பரமபத வாசல் தரிசனத்திற்கு, நேரடி டோக்கன்கள் வழங்கும் திட்டமில்லை என தேவஸ்தானம் கூறியுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில், தரிசனத்திற்கான டிக்கெட்களை குலுக்கல் முறையில் வழங்கவும் தீர்மானித்து உள்ளது.
News November 19, 2025
இந்த வங்கிக் கணக்குகள் நாளை முதல் இயங்காது

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில், நவ.20 (நாளை) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News November 19, 2025
மாத்திரை சாப்பிடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!

➤மாத்திரை சாப்பிட்ட உடன் படுக்க வேண்டாம் ➤ஏற்கெனவே ஒரு நோய்க்காக மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால் டாக்டரிடம் அதை தெரிவியுங்கள் ➤சூடான நீரில் மருந்தை உட்கொள்ள வேண்டாம் ➤எத்தனை நாள்களுக்கு மருந்து பரிந்துரைக்கப்படுகிறதோ, அத்தனை நாள்களுக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும் ➤மாத்திரையை சரியான வெப்பநிலையில் வையுங்கள் ➤சுயமருத்துவம் பார்க்கவேண்டாம். விழிப்புணர்வுக்காக SHARE THIS.


