News October 19, 2025

கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது பயமாக உள்ளது: SKY

image

டி20 கேப்டனாக கில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது என்பது அனைவருக்குமே பயத்தை கொடுக்கு எனவும், ஆனால் அந்த பயம் தான், சிறப்பாக விளையாட தூண்டும் உந்துசக்தியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் நடக்க வேண்டியது நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

BREAKING: வெளுத்து கட்டப்போகும் மழை… ALERT

image

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 19-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது.

News December 14, 2025

வாக்கு திருட்டு முழக்கத்துடன் டெல்லியில் காங்., பேரணி

image

பாஜக மற்றும் ECI மீது ராகுல் வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பிஹார் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ், டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளது. மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் பேரணியில், சோனியா, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

News December 14, 2025

மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி?

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20-ல் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், 2-வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பாதைக்கு திரும்ப இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். அதேசமயம் கடும் போராட்ட குணம் கொண்ட SA அணி மீண்டும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

error: Content is protected !!