News August 19, 2024
கடன்களை ரத்து செய்ய வேண்டும்: பினராயி விஜயன்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், வட்டித் தொகையில் தளர்வு அல்லது மாதாந்திர தவணை நீட்டிப்பு ஆகியவை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தீர்வாக இருக்காது என்றார். கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு பெரிய அளவில் சுமைகள் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
Similar News
News January 25, 2026
டி20 WC-ல் பாகிஸ்தான் விளையாடுவது உறுதி

டி20 WC-ல் பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம் <<18949883>>என்று பரவிய தகவலுக்கு <<>>முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டி20 WC-க்கான அணியை பாகிஸ்தான் அறிவித்ததே அதற்கு காரணம். பாகிஸ்தான் அணி: சல்மான் அலி அகா(C) அப்ரார் அகமது, பாபர் ஆஸம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா (WK) , முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, நசீம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
News January 25, 2026
கஞ்சா கடத்தும் மையமான தமிழகம்: TTV தினகரன்

TN-ல் நடக்கும் சட்டவிரோத செயல்களில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்புள்ளதாக TTV தினகரன் சாடியுள்ளார். சேலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற திமுக நிர்வாகி கைது, ராமநாதபுரத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்திகளை X-ல் சுட்டிக்காட்டி, TN-ஐ கஞ்சா கடத்தும் மையமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடத்தல் பின்னணியை கண்டறிந்து சட்டவிரோத செயல்களை அரசு தடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 25, 2026
தேர்தல் அல்ல; ஜனநாயகப் போர்: விஜய்

பூத் என்றாலே கள்ள ஓட்டுப் போடும் இடம் என திமுக, அதிமுகவினர் நினைப்பதாக விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல், TN மக்களுக்கு வெறும் தேர்தல் மட்டுமல்ல ஜனநாயகப் போர் என ஆவேசமாக கூறினார். மேலும், ஆளும் கட்சி, ஏற்கெனவே ஆண்ட கட்சிக்கு மாற்றாக தவெகவை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன?


