News August 4, 2024
லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியை தழுவினார். அரையிறுதி போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்-ஐ எதிர்கொண்ட அவர், 0-2 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அவர், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளார்.
Similar News
News January 21, 2026
ராகுல் காந்தியை சந்திக்கிறாரா கனிமொழி?

திமுக – காங்கிரஸ் கூட்டணி மதில் மேல் பூனை போல தடுமாறி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் KC வேணுகோபாலை டெல்லியில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அதிக தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்குவது குறித்து KC வேணுகோபால் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 21, 2026
இனி எல்லாமே T20 மயம் தான்!

ODI கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து விட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு இந்தியா மயமாகவுள்ளது. இன்று முதல் NZ-க்கு எதிரான T20I தொடர் நடைபெறுகிறது. இத்தொடர் முடிந்தவுடன் நடப்பு சாம்பியன் இந்தியா மீண்டும் கோப்பையை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பிப். 7-ம் தேதி T20I WC தொடங்கவுள்ளது. அத்தொடர் முடியும் அதே வேகத்தில், மார்ச் 26-ம் தேதி IPL தொடர் ஆரம்பிக்கிறது.
News January 21, 2026
மோடி, கோலி இல்ல.. இவர்தான் நாட்டின் டாப் செலிபிரிட்டி!

ஜனவரி 1-15 காலகட்டத்தில் நாட்டின் பிரபலமான நபர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. சோஷியல் மீடியா டிரெண்ட், மக்கள்- மீடியாவின் கவனத்தில் தொடர்ந்து நீடிப்பது போன்ற தரவுகளின் கீழ் இந்த லிஸ்ட் தயாராகியுள்ளது. இந்த பட்டியலில் PM மோடி, விராட் கோலி ஆகியோரை முந்தி நடிகர் ஒருவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் என அறிய மேலே உள்ள படத்தை இடதுபக்கமாக Swipe பண்ணுங்க.


