News October 31, 2025

கடைசி இடம் பிடித்த குகேஷ்.. பரிசுத்தொகை இவ்வளவா?

image

உலகின் டாப் 4 கிராண்ட் மாஸ்டர்ஸ் பங்கேற்ற Clutch Chess: Champions Showdown தொடரில், மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிவரை போராடிய இந்தியாவின் டி குகேஷ், 4-வது இடத்தை பிடித்துள்ளார். 2-வது, 3-வது இடங்களை USA-ன் ஃபேபியானோ கரோனா, ஹிகாரு நகமுரா பிடித்துள்ளனர். கார்ல்சனுக்கு ₹1.50 கோடியும், கடைசி இடம் பிடித்த குகேஷுக்கு ₹90.40 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

பிரபல நடிகர் ஹோமயூன் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹோமயூன் எர்ஷாதி(78) உடல் நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக போராடி வந்த அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈரானை சேர்ந்த அவர், உலகம் முழுவதும் பிரபலமான தி கைட் ரன்னர், அகோரா, ஜீரோ டார்க் தேர்ட்டி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து அசத்தியவர். இந்தியா உள்ளிட்ட உலக சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 12, 2025

ஒற்றை தலைவலிக்கு என்ன தான் தீர்வு?

image

இன்றைய சூழலில் பெரும்பாலான மக்களுக்கு வரும் ஒரு பொதுவான நோய் என்றால் அது ஒற்றை தலைவலி. இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறும் டாக்டர்கள், இதை தடுக்க முடியும் என்கின்றனர். அதற்கு *சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் *தண்ணீர் குடிப்பது மிக அவசியம் *மன அழுத்தத்தை குறைக்கவும் *அதிக ஒளி, சப்தம் கூடாது *சரியான தூக்கம் மிக அவசியம் *மாதவிடாயின் போது பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

News November 12, 2025

‘iam back’ அமலா பால் PHOTOS

image

‘சிந்து சமவெளி’ மூலம் அறிமுகமான அமலா பால், ‘மைனா’ படத்திற்கு பிறகு பிரபலமானார். அதைத்தொடர்ந்து விக்ரம், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். பின்னர், திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியவர், தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார். அவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!