News August 23, 2024
கொட்டுக்காளி: ஆதிக்கத்தில் இருந்து மீனா மீள்வாளா?

கால் கட்டப்பட்ட சேவல் தப்பிக்கும் முயற்சியில் போராடுகிறது. அதை போலவே பெண்ணொருத்தியும் தவிக்கிறாள். அடுக்கில் கீழே உள்ள சாதி ஆணை காதலிக்கும் மீனா (அன்னா பென்), அவளது முறைமாமன் (சூரி) & அவர்களது குடும்பத்தில் நடக்கும் கதைப் பின்னணியில் உலகத் தரத்தில் ஒரு படத்தை இயக்குநர் வினோத் ராஜ் உருவாக்கியுள்ளார். பேயாகத் துரத்தும் ஆணாதிக்கத்தில் இருந்து மீனா மீள்கிறாளா என்பதே முடிவு? (W2N 3/5)
Similar News
News November 16, 2025
2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.
News November 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 16, ஐப்பசி 30 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம், ஞாயிறு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: ஆதித்ய ஹிருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்.
News November 16, 2025
BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


