News March 24, 2024
அரைசதம் விளாசினார் கே.எல்.ராகுல்

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி வருகிறார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர், பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல், 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி தனது 34ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். இதனால் லக்னோ அணி இலக்கை நெருங்கி வருகிறது. யார் வெற்றி பெறுவார்?
Similar News
News November 8, 2025
மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், போதைப் பொருள்கள் பயன்பாட்டை எதிர்த்தும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார். மதுவின் பிடியில் இருந்து இளைய தலைமுறையினரை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சமத்துவ நடைபயணம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜன.2-ல் தொடங்கும் இந்த நடைபயணத்தை மதுரையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வைகோ பேசியுள்ளார்.
News November 8, 2025
அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி: வீரலட்சுமி

தவெக செய்த ரெளடிசமே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம் என தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி சாடியுள்ளார். அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்த அவர், களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களே நிஜ ஹீரோ என்றும், கரூர் துயருக்கு பிறகு தவெகவில் அனைவருமே ஓடி ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்தி, விஜய் சிறை செல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
News November 8, 2025
சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா, இறுகப்பற்று படங்களில் கவனம் ஈர்த்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை போட்டோஷூட் பிரியர் என்றே சொல்லலாம். வாரத்திற்கு 2-3 முறை புது புதிதாக போட்டோக்களை SM-ல் பதிவிடுவார். இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சற்று கவர்ச்சிகரமான ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை SM-ல் அவர் பதிவிடவே சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.


