News September 28, 2025

கரூர் சம்பவத்தால் தாங்க முடியாத துயரம்: கார்த்தி

image

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று கார்த்தி கூறியுள்ளார்.

Similar News

News November 15, 2025

பற்கள் மஞ்சளா இருக்கா? நீங்களே சரி செய்யலாம்!

image

பற்கள் மஞ்சளாக இருப்பதால் வாய் திறந்து பேசக்கூட சங்கடப்படுகிறீர்களா? கவலைய விடுங்க. இதனை வீட்டிலேயே சரி செய்யலாம். ஒரு டீஸ்பூன் உப்புடன் சில துளிகள் எண்ணெய் கலந்து, பிரஷ் பயன்படுத்தி பற்களில் ஒரு வாரம் தேய்க்கவும். எலுமிச்சை (அ) ஆரஞ்சு பழத்தோலையும் பற்களில் தேய்க்கலாம். இவற்றை தொடந்து செய்துவர மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சென்று ஆகும் என்கின்றனர். பலருக்கு பயனளிக்க SHARE THIS.

News November 15, 2025

கனமழை: 10 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

image

<<18295449>>கனமழையை <<>>எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, 10 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற தகவலை அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 15, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. செப்டம்பரில் 1.54% ஆக இருந்த நாட்டின் சில்லறை பண வீக்கம், அக்டோபரில் 0.25% ஆக குறைந்திருக்கிறது. இதனால், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், கடன்களுக்கான MCLR புள்ளிகளை வங்கிகள் குறைக்கும். இதனால், உங்களின் EMI குறையும். SHARE IT

error: Content is protected !!