News January 14, 2025
கார் விபத்தில் கர்நாடக அமைச்சர் காயம்

கர்நாடக பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் கார் மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. கிட்டூர் அருகே காரில் சகோதரருடன் அவர் சென்று கொண்டிருந்தார். சாலையில் நாய் குறுக்கே வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பினார். அப்போது கார் விபத்தில் சிக்கியது. இதில் லட்சுமிக்கு முகம், இடுப்பில் காயம் ஏற்பட்டது. சகோதரரும் லேசான காயமடைந்தார். 2 பேரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


