News May 1, 2024

தமிழகப் பயணிக்கு கர்நாடகா அரசு ₹1 லட்சம் இழப்பீடு

image

கடந்த ஆண்டு கர்நாடக அரசுப் பேருந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி பெங்களூருவுக்கு பயணித்தார். அப்போது, அவர் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்க்கு ₹200 லக்கேஜ் கட்டணம் செலுத்தும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அவர் ₹50 தர முன்வந்ததால், பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்.. கொந்தளித்த அமித்ஷா

image

ஒரு தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது, அர்த்தமற்றது என அமித்ஷா கூறியுள்ளார். Parliment-ல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அமித்ஷா, யாரையோ திருப்திப்படுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக பேசியுள்ளார். மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக உத்தவ் தாக்கரே கட்சி கூட கையெழுத்திட்டுள்ளதாக அமித்ஷா சாடினார்.

News December 11, 2025

வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருக: திருமாவளவன்

image

பார்லிமெண்ட்டில் SIR பற்றிய விவாதத்தில் பேசிய திருமாவளவன், SIR-ஐ தேர்தலையொட்டி அவசர அவசரமாக நடத்தாமல், தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்த வேண்டும் என்றார். குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் ECI-க்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், அதிகார வரம்பை மீறி ECI செயல்படுவதாக சாடினார். EVM முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!