News January 21, 2026
JUSTIN: ஊட்டியில் அமைகிறது டைடல் பார்க்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கியது. தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் நீலகிரி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட தலைநகர் ஊட்டியில் புதிய டைட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News February 10, 2026
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த 201 மனுக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, ரேஷன் கடை தேவை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
News February 10, 2026
நீலகிரி: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


