News August 24, 2025
சற்றுமுன்: மாதம் ₹2000 பெற விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2000 உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்து, உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு ( ஆண், பெண்), ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதந்தோறும் ₹2000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோர், தகுதியான ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 19, 2026
அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது: அன்பில் மகேஸ்

2003-ல் ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை மேற்கோள்காட்டிய அவர், 5 ஆண்டுகளாக அதை செய்யாமல், திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன் என்றார். மேலும், இது தேர்தல் நாடகம்தான் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை இன்று(ஜன.19) சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹170 உயர்ந்து ₹13,450-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹1,07,600-க்கும் விற்பனையாகிறது. <<18893945>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதே இந்திய சந்தையில் உயரக் காரணம் எனவும், இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News January 19, 2026
ரன் மெஷின் கோலியின் உலக சாதனை!

களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதாவது ஒரு சாதனை படைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார் விராட் கோலி. அது நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் 3-வது வரிசையில் களமிறங்கி அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை 244 இன்னிங்ஸில் 12,676 ரன்களை கோலி அடித்துள்ளார். இந்த பட்டியலில் 12,662 ரன்களுடன் ஆஸி., ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்தில் உள்ளார்.


