News November 17, 2024

JUST NOW: CM ஸ்டாலின் வாழ்த்து

image

உலக கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழக சிறுமி காசிமாவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். X பக்க பதிவில் அவர், 6வது CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த தமிழ்மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! எனவும், பெருமை கொள்கிறேன் மகளே, எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News December 12, 2025

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

image

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் FLC – முதல் நிலை சரிபார்த்தல் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மேற்பார்வையில், நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்துக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News December 12, 2025

ரயில்வேக்கு சொந்தமாக இவ்வளவு நிலமா?

image

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் இந்திய ரயில்வேக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1068.54 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், RPF & உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

News December 12, 2025

நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

image

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!