News September 29, 2025

சற்றுமுன்: ‘விஜய் மீது செருப்பு வீசப்பட்டது’

image

கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் அளித்த பின்பு தவெக வழக்கறிஞர் அறிவழகன் பேசுகையில், செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது என்று குற்றஞ்சாட்டினார். மேலும், சம்பவ இடத்தில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடப்பதால், சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும். களத்தில் நடந்ததை வீடியோ பதிவு செய்துள்ளோம், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

Similar News

News November 15, 2025

OFFICIAL: CSK அணியில் இருந்து கான்வே விடுவிப்பு

image

CSK அணியில் இருந்து நியூஸி., பேட்ஸ்மென் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 3 ஆண்டுகளாக தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2023 ஐபிஎல் ஃபைனலில் CSK அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கான்வே. 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களை அடித்து அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

News November 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 15, ஐப்பசி 29 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶சிறப்பு: ஏகாதசி விரதம், கருட தரிசனம் நன்றி. ▶வழிபாடு: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

News November 15, 2025

35 ஆண்டுகளாக MLA-கள்.. மீண்டும் வெற்றி

image

பிஹார் NDA கூட்டணி மூத்த வேட்பாளர்களான பிரேம் குமார் (BJP), பிஜேந்திர பிரசாத் யாதவ் (JDU) ஆகியோர், 9-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 1990 முதல் MLA-க்களாக உள்ளனர். கயா தொகுதியில் பிரேம் குமார் 26,423 வாக்குகள் வித்தியாசத்திலும், பிஜேந்திர சிங் 30,803 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர். இருவரும் இதே தொகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளாக MLA-க்களாக உள்ளனர்.

error: Content is protected !!