News October 11, 2025
சற்றுமுன்: ஒரேநாளில் ₹6,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் அதிகரிப்பது நடுத்தர மக்களை தலைசுற்ற வைக்கிறது. இன்று ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 உயர்ந்திருக்கிறது. தற்போது, 1 கிராம் வெள்ளி ₹190-க்கும், 1 கிலோ வெள்ளி ₹1.90 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு 20,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாம்.
Similar News
News December 14, 2025
டாஸ்மாக்: மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR CODE உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
News December 14, 2025
2025-ல் சிறந்த OTT படங்கள்

OTT தளங்களில் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள் அடிப்படையில் 2025-ல் சிறந்த OTT படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 14, 2025
சற்றுமுன்: மூத்த தலைவர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், அகில பாரத வீரசைவ மகாசபையின் தேசிய தலைவருமான ஷமனுர் சங்கரப்பா(92) காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னையால் பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத நிலையில், சங்கரப்பா உயிரிழந்தார். எளிமையான பின்னணியில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த அவர், பல ஆண்டுகளாக MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். RIP


