News December 10, 2025
JUST IN: திருப்பரங்குன்றம் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் பெரிய ரத வீதியிலுள்ள தர்காவிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
Similar News
News January 25, 2026
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில் வளாகத்தில், வரும் 28.01.2026 அன்று காலை சுமார் 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
News January 25, 2026
மதுரை மண்டலத்தில் பி.எப். குறைதீர் முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நிறுவனம் சார்பில், குறைதீர் முகாம் மதுரை மண்டலத்தில் ஜனவரி 27-இல் நடைபெறுகிறது. மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டக் கிளை அலுவலகங்களில் குறைதீர் முகாம் ஜன 27-ம் ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
News January 25, 2026
மதுரை: பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திருமங்கலம் எஸ்ஐ பாஸ்கரன் நேற்று வேதக்குளம் பகுதியில் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அதில் சோனை கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து சுங்குராம் பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(39), பாலகிருஷ்ணன்(51), செங்குளம் சக்திவேல்(56) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10,000 மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


