News April 13, 2024
சற்றுமுன்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்.19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்கு பின் விசாரணைக்கு வரும் எனவும் தெரிகிறது. குறிப்பாக, கோடநாடு வழக்கு ஏப்.22, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Similar News
News November 14, 2025
முன்னிலை வகிக்கும் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள்

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். ➤தாராபூர் தொகுதி: DCM சாம்ராட் சவுத்ரி முன்னிலை ➤அலிநகர் தொகுதி: பாடகி மைதிலி தாக்குர் முன்னிலை ➤லக்கிசராய் தொகுதி: DCM விஜய் குமார் சின்ஹா முன்னிலை ➤கதிஹார் தொகுதி: முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான தர்கிஷோர் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார்.
News November 14, 2025
தபால் வாக்குகள்… அமலுக்கு வந்த புதிய நடைமுறை

தற்போதுள்ள முறையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால், அதன் முடிவுகள் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, கடைசி சுற்று முடிந்தபின் தான் அறிவிக்கப்படும். ஆனால், பிஹார் தேர்தலில் நடைமுறைக்கு வந்த புதிய நடைமுறையில், கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசி நேரத்தில் ஏற்படும் சர்ச்சையை தவிர்க்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
News November 14, 2025
அதிக இடங்களில் பாஜக முன்னிலை

ஆளும் NDA கூட்டணி, ஆட்சியை தக்கவைக்க தேவையான 122 இடங்களை விட கூடுதல் இடங்களில்(126) தற்போது முன்னிலை பெற்றுள்ளது. BJP-67, JDU-49, LJP(RV)-3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில், RJD-66, CONG-10, CPL(ML)-5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.


