News February 22, 2025
Junior Attendant வேலை ரூ.1 லட்சம் வரை சம்பளம்

IOCL ஆனது Junior Attendant உள்ளிட்ட 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். விணப்பிக்க இங்கே<
Similar News
News July 9, 2025
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007892>>(தொடர்ச்சி 1/2)<<>>
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

ரெயில்வே தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஆகஸ்ட் 31 வரை கரூர் வழியாக திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திண்டுக்கல் – நாகர்கோவில் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.