News July 12, 2024

OBC என்பதால் பொறாமை: சித்தராமையா

image

கர்நாடக முதல்வர் சித்தராமையா, நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கப்படும் நிலங்களில் மோசடி செய்ததாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, OBC பிரிவைச் சேர்ந்தவர், 2ஆவது முறையாக முதல்வராகி இருப்பதை கண்டு பொறாமைப்படுவதாகவும், இந்த பொய் புகார்கள் தன்னை அச்சப்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக முன்னரே விசாரிக்க உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News July 9, 2025

₹1.23 லட்சம் சம்பளம்… டிகிரி போதும்

image

இந்திய கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் 170 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்து, பின் டிகிரி முடித்த 21-25 வயதினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி & நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடக்கும். சம்பளம்: ₹56,100 – ₹1.23 லட்சம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 23. இணைய முகவரி: https://joinindiancoastguard.cdac.in/

News July 9, 2025

ஷிண்டே தரப்பு MLA-வை கண்டித்த CM பட்னாவிஸ்

image

ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா MLA <<17002259>>சஞ்சய் கெய்க்வாட்டின் செயலுக்கு <<>>CM தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். MLA விடுதியில் கெட்டுப்போன உணவு கொடுத்ததாக கூறி ஊழியரை சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சஞ்சையின் செயல்பாட்டுக்கு CM பட்னாவிஸ் சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

News July 9, 2025

நடிகர் பிஸ் வெங்கட் உடல்நிலை கவலைக்கிடம்

image

நடிகர் பிஸ் வெங்கட்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார். இதுவரை சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு அவர் மாற்றப்பட்டு இருப்பதாகவும், நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உடல்பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!