News June 8, 2024
OPS அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகல்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக, ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு ஓபிஎஸ் படுதோல்வியடைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் கூட்டமாக விலகியுள்ளனர். இதன்பின் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில், ஓபிஎஸ்ஸூக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
Similar News
News July 11, 2025
நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
News July 11, 2025
மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

*கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது. *நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, சொல்கிறீர்களோ, செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. *ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும். * அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படையாது,வன்மம் கொள்ளாது,பழிவாங்காது.
News July 11, 2025
கடலூர் கோர விபத்து எதிரொலி: 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் தூங்கிக் கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.