News November 30, 2024
இறந்த சிறுமியிடம் விசாரிக்க போராடும் ஜப்பான்..!

கடந்த ஆக.31ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சிறுமியிடம் ஜப்பான் அரசு விசாரணையைத் தொடங்க உள்ளதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். 17 வயது சிறுமி 12ஆவது மாடியில் இருந்து குதித்த போது, கீழே நடந்து சென்ற சிகாகோ ஷிபா (32) என்ற பெண் மீது விழுந்தார். இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு பெண்ணை கொன்ற குற்றத்திற்காக அச்சிறுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
BIHAR EXIT POLL: மீண்டும் NDA ஆட்சி

பிஹாரில் மீண்டும் NDA ஆட்சி அமையும் என TIMES NOW சேனல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. Satta Bazaar-ன் முடிவுகளை மேற்கோள் காட்டி NDA கூட்டணி 135-140 தொகுதிகள், MGB கூட்டணி 100-115 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 11, 2025
BIHAR EXIT POLL: பாஜக கூட்டணி வெற்றி

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன. பீப்பிள் பல்ஸ் அறிவித்துள்ள கணிப்பின் படி பாஜக – ஜேடியூ NDA கூட்டணி 133-159 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ஜேடி-காங்கிரஸின் இந்தியா கூட்டணி 75-101 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. NDA கூட்டணி-46.2%, இந்தியா கூட்டணி-37.9%, ஜன் சுராஜ்-9.7% வாக்குகள் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: ஒரு பார்வை

*மொத்த தொகுதிகள்: 243 (SC-38, ST-2) *மொத்த வாக்காளர்கள் (செப்.30, 2025)- 7.4 கோடி, ஆண் வாக்காளர்கள்-3.9 கோடி, பெண் வாக்காளர்கள்- 3.5 கோடி *தேர்தல் தேதி (2 கட்டங்கள்): நவ.6 & 11 *தேர்தல் முடிவு தேதி: நவ.14 *கடந்த தேர்தல் முடிவு (2020): NDA கூட்டணி (BJP+JDU+)-125 இடங்கள்; INDIA (RJD+CONG+)- 110 இடங்கள்.


