News October 11, 2025
மாடர்ன் ரதியே ஜான்வி கபூர்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி, தொடர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜான்வியின் இந்த ஸ்டைலிஷ் லுக் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News December 10, 2025
வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்கள் வரும் டிச.,11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
News December 10, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News December 10, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. 15 பேர் உயிரிழந்த இச்சம்பவத்தில், ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியை சேர்ந்த பிலால் நசீர் மல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு உதவிகள் செய்ததாகவும், குண்டுவெடிப்பு குறித்த ஆதாரங்களை அழித்ததாகவும் NIA குற்றஞ்சாட்டியுள்ளது.


