News April 23, 2025
உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் இழப்பீடு: ஜம்மு அரசு

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் CM உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். அதேபோல் படுகாயம் அடைந்தவர்களுக்கு ₹2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உமர் அப்துல்லா X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
ALERT: செல்போன் நம்பரை வெளியிட்டார் நடிகை ருக்மினி

‘காந்தாரா சாப்டர் 1’ படத்திற்கு பிறகு நேஷனல் கிரஷ் ஆக மாறியுள்ளார் ருக்மினி வசந்த். இந்த நிலையில், அவரை போல யாரோ ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து, முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, தனது சோசியல் மீடியாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக 9445893273 என்ற செல்போன் எண்ணில் இருந்து தன் பெயரைக் கூறி யாரேனும் பேசினால் நம்ப வேண்டாம். அவர்களிடம் உஷாராக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
மாதம் மாதம் ₹11,000 கிடைக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் மாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் இருக்கு போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News November 8, 2025
விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார் ரூம் மூலம் தவெக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் பணிகளை தினமும் விஜய் நேரடியாகவே கண்காணிப்பார் என்றும் மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வகையிலும் வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


