News October 19, 2025

மதியம் வரை மழை வெளுக்கும்

image

பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், தென்காசி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை இடியுடன் கூடிய மழை வெளுக்கும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, தீபாவளி பர்சேஸ் செய்ய நினைத்தால், மதியத்திற்கு மேல் செல்லுங்கள்.

Similar News

News December 12, 2025

நீதிபதியை பதவி விலக சொல்வது சரியல்ல: நயினார்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட MP-க்கள் கையெழுத்திட்டு லோக்சபா தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியது தவறான முன்னுதாரணம் என்றும் விமர்சித்துள்ளார். தனிப்பட்ட ஒரு கட்சியின் வாக்கு வங்கிக்காக இவ்வாறு செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.

News December 12, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.46 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) 75 டாலர்கள் அதிகரித்து $4,271 ஆக உயர்ந்துள்ளது.

News December 12, 2025

முருகனுக்கு சுருட்டு படைத்து வழிபடும் வினோத கோயில்!

image

திருச்சி விராலிமலை முருகன் கோயிலில்தான் சுருட்டு படைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் முருகபக்தரான கருப்பமுத்து மழையில் சிக்கினார். ஆற்றை கடக்க முருகனிடம் வேண்டியபடி, அவர் சுருட்டு பிடித்துள்ளார். பின்னால் வந்தவருக்கும் சுருட்டை கொடுக்க, இருவரும் ஆற்றை கடந்துள்ளனர். அந்நபர் மாயமாக, கோயிலின் முருகன் சன்னதியில் சுருட்டு கிடந்துள்ளது. வழிகாட்ட முருகனே வந்ததாக கருப்பமுத்து கூற, சுருட்டு படையலானது.

error: Content is protected !!