News March 28, 2024

தலையில் இடி விழுந்ததை போல் உள்ளது

image

எம்.பி.சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்தார் என்பது உண்மையல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கணேசமூர்த்தியின் மறைவு தலையில் பெரிய இடி விழுந்ததை போல் உள்ளதாக உருக்கமாக கூறிய அவர், சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், 2 சீட் கொடுத்தால் தனது பெயரை பரிசீலனை செய்யுமாறு அவர் தெரிவித்திருந்ததாகவும் விளக்கமளித்தார்.

Similar News

News January 21, 2026

2000’s ஜாம்பவான்கள் ரீயூனியன்! (PHOTO)

image

2000-களின் காலகட்டத்தில் கிரிக்கெட் பார்க்க தொடங்கியவர்களுக்கு இந்த போட்டோவில் உள்ள ஜாம்பவான்களை பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சேவாக்கின் அதிரடி, யுவராஜின் Six 6’s, முகமது கைஃபின் தரமான கேட்ச்கள், நெஹ்ரா மற்றும் அகர்கரின் ஸ்விங் பவுலிங் என ஒவ்வொன்றும் உங்களுடைய நினைவில் நிழலாடும். சமீபத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி தான் SM-ல் தீயாக பரவுகிறது. இதில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்?

News January 21, 2026

NDA கூட்டணியில் மீண்டும் OPS?

image

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து <<18915214>>ஓபிஎஸ்ஸும் <<>>திமுகவில் இணையலாம் என பேசப்பட்டது. இந்நிலையில் NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அவருக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. OPS மகனுக்கு ஒரு தொகுதியும், அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி MLA அய்யப்பனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News January 21, 2026

BREAKING: வரலாறு காணாத சரிவு.. பெரியளவில் தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. இதன்மூலம், வரலாறு காணாத அளவிற்கு ஒரு டாலர் ₹91.74 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கான வலுவான தேவை, உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால், இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2025-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.95% சரிந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!